பெங்களூரு ஆகஸ்ட் 23, 2022
சுமார் 16000 கிலோ மீட்டர் வான்வழித் தடத்தில் 17 மணி நேரத்தில் கடந்து சாதனை புரிந்த இந்திய பெண் விமானி ஜோயா அகர்வால் தலைமையில் பெண் விமானிகள் கொண்ட குழுவினர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் இந்தியப் பெண் கேப்டன் ஜோயா அகர்வால் அவர்களை உளமார பாராட்டுகிறது
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ முதல், இந்தியாவின் பெங்களூரு வரையுள்ள வழித்தடம்தான் உலகின் மிக நீளமான விமான வழித்தடம். பனிபடர்ந்த வடதுருவத்தை உள்ளடக்கிய, 16,000 கிலோமீட்டர் தொலைவுகொண்ட இந்த வழித்தடத்தை 17 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது பெண் விமானிகள் குழு இந்தக் குழுவின் கேப்டனான, இந்தியப் பெண் விமானி ஜோயா அகர்வாலுக்கு, அமெரிக்க விமான அருங்காட்சியகத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. 1980-ல் சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் விமானத் துறையின் வரலாறு தொடர்பான 1,50,000 தொல்பொருட்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இங்கு ஒரு மனிதன் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். வியத்தகு சாதனைபுரிந்த ஜோயாவை மக்கள் நீதி மய்யம் மனதாரப் பாராட்டுகிறது.
மொட்டை மாடியில் அமர்ந்து, வானத்தைப் பார்த்து கனவு கண்டுகொண்டிருப்போர் மத்தியில், பாரெங்கும் பறந்து, பாரதத்தின் புகழைப் பரப்பும் இவரைப் போல, இன்னும் ஏராளமான இந்தியப் பெண்கள் சாதிக்க வேண்டுமென வாழ்த்துகிறோம். – மக்கள் நீதி மய்யம்
The world’s longest flight path spans from SanFrancisco in the US to Bengaluru in India. This massive 16000 kms long airway goes through and over the snowy North Pole. A team of Indian women pilots has achieved an epic fete of flying the entire 16000 kms in 17 hours!
The captain of the crew, Ms. Zoya Agarwal, is being honoured with a spot in America’s National Museum of Aviation. The Aviation museum was opened in 1980 in the San Francisco international airport premises. The museum proudly showcases over 1,50,000 antiquities of importance through the History of Aviation. This is the first time, a human being is showcased in this museum. Makkal Needhi Maiam applauds Ms.Zoya with brimming pride over her epic achievement! While most of us still gape in awe at an aircraft piercing through the clouds from our roof tops here’s a woman who has dared to touch the heights and make it her own! Makkal Needhi Maiam hopes and wishes to see many such achievements from our nation’s women pilots !