பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும், எதிர்ப்பாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் அடங்கிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி. பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்றும் நீதிபதிகள் யுயு லலித், ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர். ஆகவே 3:2 என்ற விகிதத்தில் வெளியாகியுள்ள இந்த தீர்ப்பின் மூலம், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த 103ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டம் செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சரி விஷயத்துக்கு வருவோம்
சாதி அடிப்படையில் உயர்சாதி பிரிவினர்க்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 1௦% இட ஒதுக்கீடை அளிக்க மத்திய ஆளும் பிஜேபி அரசு அளித்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே 5௦% இட ஒதுக்கீடு மூலமாக மேற்கண்ட இரண்டு சலுகைகையை அளித்துவந்த நிலையில் இன்னும் கூடுதலாக 1௦% அளிக்க முற்படுவது சட்டத்திற்கு ஏற்புடையது அல்ல என்று பல அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் விமரிசகர்கள் தங்கள் கண்டனத்தை முன் வைத்துள்ளனர்.
உயர்சாதி வகுப்பினர்க்கு முன்பே கொடுக்கப்பட்டுள்ள 5௦% சதவிகிதத்திற்கு அதிகமாக கொடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த போதும் தற்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இப்படி கூடுதலாக ஒதுக்கீடு அளிக்க ஒப்புதல் தந்துள்ளது.
இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ளது அப்பட்டமான சாதிபற்று என்றே புரிந்துகொள்ள வேண்டும் பொருளாதார ரீதியாக பின்னடைவில் உள்ள உயர்சாதியினர் அரசின் சலுகைகளை பெற்றுக்கொள்ள இந்த ஒதுக்கீடு வழிவகை செய்துவிடும். அப்படி நடக்கப்பெற்றால் சாதி அடிப்படையில் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு கிடைக்கபெற வேண்டிய கல்வியும் வேலைவாய்ப்பும் மிகக் கணிசமாக குறைந்து போகும். இதனால் அவர்கள் மீண்டும் வாழ்க்கைத்தரம் பின்தங்கிவிடும் அபாயம் உண்டாகிவிடும்.
சரி இவர்கள் குறிப்பிடும் பொருளாதரத்தில் பின்தங்கிய உயர்சாதியினரின் அளவுகோலாக எவற்றை நிறுத்துகிறார்கள் என்றால் அவர்களின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளோர் 5 ஏக்கர் அல்லது 1௦௦௦ சதுர அடிக்கு குறைவான வீட்டையும் கொண்டவர்கள்.
இதிலும் இன்னொரு முக்கியமான விஷயம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மத்திய அமைச்சரான ராமதாஸ் அத்வாலே, இட ஒதுக்கீடு உயர்சாதி மற்றும் பட்டியல் சமூகத்தினரிடையே மோதல்களை உருவாக்குகிறது எனவும் உயர்சாதி ஏழைகளுக்கு 25% தரவேண்டும் என்பது என் விருப்பம் ஆனால் தற்போது 1௦% தரவிருப்பது ஓர் நல்ல தொடக்கமாகவே கருதுகிறேன் என்றார். (இவருடைய கருத்து இட ஒதுக்கீடு 2௦19 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிறுத்தி அறிவிக்கபட்டதாகவே தெரிகிறது).
10% இடஒதுக்கீடு தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. சமூக நீதிப் போராட்டங்கள் இன்னும் வலுவடைய வேண்டும் ! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.