சென்னை நவம்பர் 07, 2022

1954 இல் இதே நாளில் தமிழகத்தில் பிறந்த கமல்ஹாசன் அவர்கள் பின்னாளில் ஊரும் உலகமும் வியந்து பார்க்கும் ஓர் உன்னத கலைஞனாக, மனித நேயம் மிக்கவராக, உதவிடும் உள்ளம் கொண்டவராக, அநீதிகளை சாடும் ரௌத்ரனாக, நீதியும் நேர்மையும், காந்திய வழியில் அகிம்சையும் அறத்தின் பால் தீராத பற்றும் கொண்டவராக விளங்கிடும் திரு கமல்ஹாசன் 2௦18 முதல் கூடுதல் பொறுப்பாக கட்சித் தலைவராக விளங்கி வருகிறார்.

எந்த சாயலும் அல்லது சாயமும் தன் மீது ஒட்டி விடக்கூடாது என்பதற்கு உதாரணமாக மக்களின் மீது பேரன்பு கொண்டவராக தாம் துவக்கிய கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் சூட்டினார், அடுத்தடுத்த காலங்களில் பாராளுமன்றம், சட்டமன்றம், ஊராட்சி மற்றும் மாநகராட்சி என 4 தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்தி தானும் ஓர் தொகுதியில் நின்றார். பல அரசியல் கட்சிகள் இவருடைய அசாத்திய வலிமையினை கண்டு சற்றே பதட்டம் அடைய குறுக்கு வழிகளில் சட்டமன்ற உறுப்பினர் ஆகும் வெற்றியை களவாடினர் என்றால் மிகையாகாது.

அரசியல் இவருக்கு சரிப்பட்டு வராது கொஞ்ச நாட்களுக்கு பிறகு ஒதுங்கி விடுவார் என்றெல்லாம் கணித்தார்கள் அவற்றை எல்லாம் ஒதுக்கித் தள்ளி ஆறாம் ஆண்டை நோக்கி மக்கள் நீதி மய்யம் நடை போட்டுக் கொண்டு வருகிறது.

அத்தகைய சிறப்பான ஓர் தலைவராக விளங்கும் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு மய்யம் எடுத்த விழாவே 68 ஆவது பிறந்த நாள் விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள MYLAPORE FINE ARTS உள்ளரங்கில் வெகு விமரிசையாக நடந்தது.

கமல் கலைக்கூடம் சார்பில் நாட்டுப்புற கலைஞர்களின் பண்டைய இசைக்கருவிகளுடன் பாரம்பரியம் கொண்ட நடனமும் ஒரு சேர இசைத்து துவக்கி வைத்தனர், அதனை மிகுந்த மகிழ்வுடன் கண்டு அவர்களை பாராட்டியும் மேடையில் தோன்றினார். வரவேற்புரையாக துணைத்தலைவர் திரு மௌரியா அவர்களும் அவருடைய உரையை தொடர்ந்து மற்றுமொரு துணைத்தலைவர் திரு கோவை தங்கவேலு அவர்களும் அனைவரின் சார்பாக தலைவரை வரவேற்று உபசரித்தார்கள்.

உயிரே உறவே தமிழே எனத் துவங்கிய போதே கூடியிருந்தோர் ஆராவரம் விண்ணைத் தொட்டிருக்கக்ககூடும் அவ்வளவு சந்தோஷ அலைகள் எழுந்து பின் அமைதியானது அரங்கம். பேசியவை அனைத்தும் விலைமதிப்பற்ற ஆனால் நாளைய நாட்களுக்கு உண்டான வீரியம் கொண்ட விருட்சமாக வளர முற்பட விதைத்த விதைகளே ஆகும். படங்களில் நடிப்பதை உணவாகவும் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய துவங்கிய அரசியல் கட்சியை மூச்சாகவும் ஒப்பிட்டு பேசியவர் உணவில்லாமல் கூட ஒருவன் வாழ்ந்து விடலாம் ஆனால் சுவாசிக்காமல் ஒருவனால் அதாவது என்னால் அரசியல் இல்லாமல் வாழ்வது இயலாத காரியம் என முத்தாய்ப்பு வைத்தார் தொடர்ந்து நான் மட்டும் இந்தக் கட்சிக்கு தலைவன் அல்ல நல்ல எண்ணமும் உத்வேக திறனும் திறந்த மனப்பான்மையும் கொண்டவராக இருப்பின் நீங்கள் கூட தலைவனே என்றது இன்னும் சிறப்பு.

மிகச்சிறப்பான இந்தக் கொண்டாட்டம் மய்யம் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களின் வழியாக நேரலை செய்யப்பட்டது. நேரலை என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான சிறப்பான முன்னெடுப்புகளை திறம்படச் செய்து முடித்த குழுவினருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

https://t.co/bjpNCgk7WH

அனைத்துக் கட்சி தலைவர்களும், திரையுலகத்தினர் மற்ற சார்ந்தோர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேலும் தலைவரின் பிறந்த நாளிற்கு வாழ்த்துகள் தெரிவித்த ரசிகர்கள், நற்பணி இயக்கத்தினர் மற்றும் மக்கள் நீதி மய்யம் உறவுகள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி.