சென்னை : பிப்ரவரி 15, 2௦23
நாம் தினந்தோறும் செய்தித் தாள்களில், தொலைக்காட்சிகளில் பல்வேறு பகுதிகளில் பல குற்றங்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களால் நிகழ்ந்து வருகிறது. வயது வித்தியாசம் கூட பாராமல் குழந்தைகள் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். பல சமயங்களில் வன்புணர்வுக்கு உள்ளாகி பலியான சம்பவங்களும் நாம் அறிந்து வருகிறோம். அவை மட்டுமல்லாது போதைப்பொருள் விற்பனை அதனை உபயோகித்துவரும் இளைய சமுதாயம் உட்பட பலரும் இதனால் பாதிப்படைகிறார்கள். பல பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் அவ்வப்போது ஆய்வுகள் நடந்தாலும் அதனைக் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை .
மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் போதைப் பொருட்களுக்கும் போதைக்கு அடிமையாகி இருக்கும் நிலை மாறவேண்டும் என்று விரும்பும் ஓர் தலைவர். கட்சி துவக்கும் முன்பிருந்தே பல ஆண்டுகாலங்கள் மது மற்றும் புகையிலைப் பொருட்களை உபயோகித்தல் தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்து வருகிறார். உலகில் பல நாடுகளில் அறியப்பெற்றவராக விளங்கிவரும் திரு கமல்ஹாசன் அவர்கள், இயக்குனர் திரு லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியாகி உலகநாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. விக்ரம் எனும் திரைப்படத்தினை தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து தமிழ்த்திரையுலகில் இயங்கிவரும் முக்கிய நடிகர்களான திரு விஜய் சேதுபதி, திரு சூர்யா மற்றும் திரு விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் மகத்தான வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் முக்கிய கதையம்சமே போதைப் பொருட்கள் கையாளும் உலக மாபியாக்கள் பற்றிய ஒன்றே. அதில் உச்சரிக்கப்படும் வசனங்கள் மிகக் கூர்மையாக வடிவமைக்கப்பட்டது. போதைப்பொருட்கள் உபயோகித்தல் காரணமாக பெரும் சிக்கலை உண்டாக்கி அதனால் தனது சொந்த மகனை இழந்த வலி வேதனைகளை துல்லியமாக வெளிப்படுத்தியதும் மேலும் நேர்மையான முறையில் பணியாற்றிய சிறப்பு அதிரடிப்படையில் இருந்த அதிகார்களின் குடும்பமும் இதனால் சிதைந்து போனதை காட்சிப்படுத்திய விதத்தில் இருந்தே படக்குழுவினரின் பொதுநலனை உணர்ந்துகொள்ளலாம்.
திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் போதை ஒழிக்கப்பட தன்னால் இயன்றவரை போராடுவேன் என்று கூறிவரும் திரு கமல்ஹாசன் அவர்களை சந்தித்தனர் இந்திய ஜனநாயக வாலிபர் இயக்கத்தை சேர்ந்த இளம் நிர்வாகிகள். ஒருகோடி கையெழுத்து இயக்கத்தைத் துவங்கியது குறிப்பிட்டு பேசியவர்கள் அந்த இயக்கத்தின் முதல் கையெழுத்தை திரு கமல்ஹாசன் அவர்களிடம் பெற்றனர். இந்த சந்திப்பு மய்யம் தலைமை அலுவலகமான சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்தது.
போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்து வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்(DYFI) தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களை இன்று சந்தித்து கையெழுத்துப் பெற்றனர்.
சமுதாயத்தைச் சீரழிக்கும் போதைக் கலாச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் DYFI மாநிலத் தலைவர் திரு கார்த்திக் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நம்மவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.