புதுக்கோட்டை : மார்ச் 28, 2023
புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் Dr திரு முத்துராஜா அவர்களின் கவனத்திற்கு :
1. புதுக்கோட்டை42 வார்டுகளுக்குட்பட்ட நகர்புற பகுதியில் குடிநீர் விநியோகம் ஒரு சில பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறையும் பல பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.குறைந்த பட்சம் 2 நாட்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் தட்டுபாடு இன்றி கிடைக்க குரல் கொடுக்க வேண்டும்.
2.சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட 28 கிராம பஞ்சாயத்துகளில் 9 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூ உற்பத்தி பணப்பயிராக மாறியுள்ளதால் நகரில் பூ சந்தை உருவாக்கி அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் விற்பனையை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
3.புதுக்கோட்டை ரயில் நிலையம் முதல் மருத்துவ கல்லூரி வரையிலும் மினி பஸ் அல்லது ஷேர் ஆட்டோ வழித்தடம் அமைத்து பொது போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.
4.மச்சுவாடியில் உள்ள வனப்பகுதியில் தன்னார்வலர்கள் மற்றும் ரோட்டரி ,லயன்ஸ் , தனியார் பங்களிப்புடன் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் உருவாக்குவதற்க்கு அனுமதி பெற்று தர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
5.பொருளாதாரத்தில் பின் தங்கிய மாவட்டமான புதுக்கோட்டைக்கு பெருந்தொழில் நிறுவனங்களின் கிளைகளையும்,தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிளைகளையும் கொண்டு வர முயற்சி மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும்.
6. புதுக்கோட்டை நகர்பகுதியில் உள்ள அரசு உயர்துவக்கபள்ளியில் 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.10 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது.ஆசிரியர்களும் பற்றாக்குறையே.போதுமான வகுப்பறைகளை கட்டித்தரவும் ஆசிரியர்களை நியமனம் செய்யவும் குரல் கொடுக்க மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.
நடைபெற்று கொண்டு இருக்கும் சட்ட மன்ற கூட்டத்தொடரில் புதுக்கோட்டையின் குரலாக ஒலிக்க தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ள கோரிக்கைகளை பரிசீலித்து மக்கள் பிரச்சினைகளை பேசி தீர்வு கொண்டு வர முயற்சிமேற்கொள்ள வேண்டுகிறோம்.
இவண் : திரு செந்தில்குமார், மண்டல அமைப்பாளர் – மக்கள் நீதி மய்யம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகம், திருச்சி மண்டலம்.