சென்னை : மார்ச் 3௦, 2௦23
எத்தனையோ ஆண்டுகள் நெடும் போராட்டங்கள், எத்தனையோ சமூக செயற்பாட்டாளர்கள் போராளிகள் சாதியையும் மதத்தையும் எதிர்த்தும் அதில் பிரிவினை காண்பதை எதிர்த்தும் வந்திருக்கிறார்கள் அவர்கள் போராடி பலருக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை பெற்றுத் தந்திருக்கிறார்கள். ஆயினும் காலம் தொட்டு தீண்டாமை எனும் கோர கைகள் தனது கூரிய நகங்களுடன் அவ்வப்போது எளியவர்களை குத்திக் கிழித்து ரணமாக்கி வருகிறது. அதில் மீண்டும் சிக்கிய நாடோடிப் பழங்குடியினர்.
தமிழகத்தின் முக்கிய நடிகரான செல்வன் STR எனும் சிலம்பரசன் நடித்த பத்து தல எனும் தமிழ்த்திரைப்படம் தமிழகம் மற்றும் உலகெங்கும் நேற்று தியேட்டர்களில் வெளியானது. இதில் சென்னை கோயம்பேடு அருகே உள்ள ரோகிணி சில்வர் ஸ்க்ரீன் எனும் திரையரங்கில் காட்சிகள் திரையிடப்பட்டது. பெரும் திரளான மக்கள் திரைப்படத்தை காண வந்திருந்தனர். இந்நிலையில் நாடோடிப் பழங்குடியினர் சிலர் படம் பார்க்க திரையரங்கிற்கு வந்தனர் அவர்களிடம் முறையான நுழைவுச் சீட்டுகள் இருந்தும் திரையரங்கின் ஊழியர் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என தெரிகிறது. அங்கே நீடித்த சில வாக்குவாதங்கள் அங்கிருந்த சிலரால் மொபைல் போனில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சைகள் எழுந்தன. நாடோடிப் பழங்குடியினரை அனுமதிக்கக்கூடாது என்று எங்கும் விதிகளும் சட்டங்களும் இல்லை இந்தியாவின் குடிமக்கள் எவராக இருப்பினும் அவர்களை சாதி மத அடிப்படையில் வேற்றுமை காண்பது சட்டப்படி குற்றம் என்பதை அங்கே குழுமியிருந்தவர்கள் சொல்லியும் அந்த ஊழியர் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தார். இதனிடையே இந்தக் காணொளி காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக செயலில் இறங்கிய காவல்துறையினர் திரையரங்கிற்கு விரைந்து சென்று ஊழியரை விசாரணை செய்து அவர்மீது வழக்கு பதிவு செய்தனர் மேலும் நிர்வாகத்தினரிடம் இது குறித்து அறிவித்துவிட்டு சென்றனர். திரையரங்க நிர்வாகம் இது எங்களின் கவனத்திற்கு வரவில்லை இதற்காக எங்களின் வருத்தத்தை பதிவு செய்துகொள்கிறோம் என அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
நடைபெற்ற இச்சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். பொதுவாக கமல்ஹாசன் அவர்கள் எந்த மதத்தையும் சாதியையும் உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ ஒரு போதும் பேசியதில்லை தன பார்வையில் எவரும் சமமே மனிதருள் மனிதரை வேறுபடுத்தி பார்ப்பதில்லை என பல்லாண்டுகளாக அதில் தெளிவான பார்வையுடனும் தீர்க்கமான முடிவுடனும் விளங்கி வருகிறார். திரைத்துறையில் கோலோச்சி வரும் போதும் அரசியலில் நுழைந்து கட்சி துவங்கி அதனை தொடர்ந்து நடத்தி வருவதிலும் கூட தனது கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சி, படத் தயாரிப்பு நிறுவனம் என எங்கும் சாதி மதம் பிரிவினை பாகுபாடு பார்ப்பதென்பது அறவே கூடாது என்று மிகக்கடுமையான கட்டுபாடுகளை விதித்து இருக்கிறார் என அறியவருகிறது. கட்சியில் இனைபவரும் சரி தேர்தலில் போட்டியிடும்போது நிரப்பப்படும் விண்ணப்ப படிவங்களில் கூட சாதி மற்றும் மதம் குறித்த கேள்விகள் கேட்கப்படுவதில்லை அதனை எந்த வகையிலும் வாய்மொழியாகவோ கூட சொல்ல அவசியமுமில்லை என்பது கொள்கையாகவே வைத்துள்ளார் என்பது நன்கு புரியும்.
Rohini theatre episode: Discrimination in, humanity out- The New Indian Express
Kamal Haasan comments upon the Rohini theatre row- Cinema express
பழங்குடியினருக்கு மறுப்பு! கொந்தளித்த கமல்ஹாசன் – லங்காசிறி நியூஸ் (lankasri.com)