சென்னை : மார்ச் 24, 2024
பாராளுமன்ற தேர்தல் பரப்புரை வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் தனியார் அரங்கில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிர்வாகிகளுடன் மனம் திறந்து உரையாற்றியபோது அவரின் நகைச்சுவை உணர்வு மிளிர்ந்தது. அவற்றில் மிக முக்கியமானதை தொடர்ச்சியாக பதிவுகளாக தருகிறோம்.
அவ்வாறு பேசுகையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் செயற்கையாக உருவாக்கப்படும் முறையற்ற, ஜனநாயகத்திற்கு புறம்பான செயல்களினால் அதன் மீது நம்பிக்கையற்ற தன்மை உருவாகிவிட்டது. நமக்குக் கிடைத்த தொழில்நுட்பத்தினை தவறாக மாற்றம் செய்வது சற்றும் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. அப்படிப்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் செய்யப்படும் தில்லுமுல்லுகள் குறித்து கீழ்கண்டவாறு பேசியது நகைச்சுவையிலும் கருத்தாழமிக்க தகவலை பதியச் செய்துள்ளார்.
“விபத்துக்கான காரணம் CAR அல்ல, அதன் ஓட்டுநர்” என்று EVM இயந்திரம் குறித்து கருத்து தெரிவித்த தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், EVM இயந்திரத்தில் பதிவு செய்யும் ஒவ்வொரு ஓட்டுக்கும் ரசீது வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். – மக்கள் நீதி மய்யம்
