தமிழகம் பிப்ரவரி 28, 2022
மக்கள் நீதி மய்யம் – 5 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் திரு. கமல் ஹாஸன் அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அங்கு நமது தமிழக அரசின் தலைமைச் செயலர் திரு வெ. இறையன்பு ஐ எ எஸ் அவர்களைச் சந்தித்தார்.
அந்த சந்திப்பினைப் பற்றி செய்தியாளரிடம் “12 ஆண்டுகளுக்கு முன் சட்டமியற்றப்பட்டு இன்னமும் நடைமுறைக்கு வராத ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகளை நடைமுறைப்படுத்தக் கோரி தலைமைச் செயலாளரிடம் மனு கொடுத்தோம்.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி மலர ஏரியா சபைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம்” என கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தலைவர் முன்மொழிந்த ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகளை தமிழகம் முழுக்க உருவாக்கப்பட்டு மக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்திட வேண்டும் என ஒவ்வொரு மாவட்டம் தோறும் மக்கள் நீதி மய்யம் சார்பாக ஆட்சியர் அவர்களிடம் வேண்டுகோள்/கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வேண்டும் என துணைத் தலைவர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் மய்யம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
கேட்டுக் கொண்டதுபோல மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், கட்சியினர் தத்தமது மாவட்டத்தில் ஆட்சியைரை சந்தித்து மனுக்களை அளித்தார்கள். அதன் காணொளி மற்றும் புகைப்படத்தை உங்களின் பார்வைக்கு.
பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அன்று தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை அளித்தனர்.






















நாளிதழ்களில் வெளியான செய்திகளின் புகைப்படம்
மக்கள் நலனே – மக்கள் நீதி மய்யம் எண்ணம்.
மேலும் ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே !




