சென்னை மே 13, 2022
குடும்ப அட்டைதாரர்கள் (Ration Card) தங்கள் குடும்ப அட்டைகளில் மாற்றம் செய்ய வேண்டி இருப்பின் அதற்கான முகாம்கள் சென்னையில் சுமார் 19 மண்டலங்களில் (14.05.2022) மே 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் நடக்கவிருக்கிறது.
எனவே பயனாளிகள் எவருக்கேனும் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருப்பின் தவறாது சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்கள் சென்று சேவையை பெற்றுக் கொள்ளுமாறு மக்கள் நீதி மய்யம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
