சென்னை ஏப்ரல் 24, 2022
திருவிக நகர் பகுதி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் அதன் சார்பு நற்பணி அணியினர் ஏற்பாட்டில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தகிக்கும் வெயிலின் தாக்கம் சோர்வை தரும் என்பதை கருத்தில் கொண்டு நீர் மோர் பந்தல் அமைத்தனர். அதன் மூலமாக நீர் மற்றும் மோர் என நம்மவர் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்களின் ஆணைப்படி வழங்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், நற்பணி அணியின் நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறவுகளும் முன்னின்று நடத்தினர். நீர் மோர் வழங்குதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது பொதுமக்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் உறவுகள் உடனே நீர் மோர் அருந்திய பின் அங்கு போடப்பட்டிருந்த கோப்பைகளை எதையும் விட்டு விடாமல் சேகரித்து அவ்விடத்தை முழுவதுமாக சுத்தம் செய்து முடித்தனர்.




