சென்னை மே 03, 2022
மெத்த பணம் கொண்ட மனிதர்களையும் சரி நடுத்தர வாழ்வின் எளிய மனிதர்களை, சாலையோர வாழ்வை வாழ்ந்து வரும் மக்கள் என ஒருவரையும் பாக்கி இல்லாமல் துவம்சம் செய்தது இந்த கொரோனா பெருந்தொற்று.
இருந்தவர்கள் பிழைத்துக் கொண்டார்கள் ஏதும் இல்லை என்பார்கள் வீதியில் நின்றார்கள். மனம் இருந்தவர்கள் தங்கள் வசதிக்கேற்ப பிறருக்கு இயன்றதை செய்து தந்தார்கள்.
தலைவர் கமல் ஹாஸன் அவர்கள் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக நற்பணி செய்து வருவது தெரிந்ததே அவர் போல் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் நற்பணி இயக்க உறவுகள் என எல்லோரும் நன்கொடைகள் உணவு உடைகள் மருத்துவ உபகரணங்கள் என தந்து கொண்டே இருந்தனர்.
அப்படி கொரோனா தொற்று காலங்களில் பாதிப்படைந்த முதியவர் ஒருவர் தலைவர் கமல் ஹாஸன் அவர்கள் தனக்கு செய்த உதவியை சொல்லி பெருமிதம் கொள்கிறார்.

