மார்ச் : 26, 2025

தமிழ்த்திரையுலகின் மிகச்சிறந்த இயக்குனரும் நடிகருமான திரு. பாரதிராஜா அவர்களின் மகன் திரு.மனோஜ்குமார் பாரதி (48) அவர்கள் இதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். தமிழ்த்திரையுலகின் பிரபலமான இயக்குனராக திகழும் திரு.பாரதிராஜாவின் மகனான மனோஜ் தனது தந்தையின் இயக்கத்தில் முதன் முறையாக கதாநாயகனாக தாஜ்மகால் என்கிற படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துவந்தார். இதனிடையே இயக்குனர் மணிரத்னம் இயக்கம் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். 2023 ஆண்டில் வெளியான மார்கழித் திங்கள் எனும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதயத்தில் அறுவைசிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணமடைந்தார். தனது அபிமான இயக்குனரும் உற்ற நண்பருமான இயக்குனர் திரு.பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் அவர்களின் இயற்கை எய்தியது குறித்து அறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/ikamalhaasan/status/1904587424954744902

“நடிகரும் எனது ஆத்ம நண்பர் இயக்குநர் பாரதிராஜாவின் புதல்வனுமான மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். தனது அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/maiamofficial/status/1904867596979319162

“இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மகன் மனோஜ் காலமான செய்தி கேள்விப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.

அவர் வெளியூரில் இருக்கும் காரணத்தால், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் சார்பாக கட்சியின் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அவர்கள், பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள், மாநிலச் செயலாளர்கள் திரு.செந்தில் ஆறுமுகம், திரு.முரளி அப்பாஸ், திரு.லக்ஷ்மன், திரு.ராகேஷ் ராஜசேகரன், திருமதி.ஸ்னேஹா மோகன்தாஸ், மாநிலத் துணைச் செயலாளர் திரு.P.S.ராஜன் முதலானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.”

மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/Maiatamizhargal/status/1904922883635228822

#KamalHaasan #MakkalNeedhiMaiam #ManojBharathiraja