கோயம்புத்தூர் : மே 03, 2025
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனைப்படி தொழிலாளர் தினமான மே 1 நாளன்று கோயம்புத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் ம.நீ.ம ஆதிதிராவிடர் அணி சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.




மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளர் தின விழா.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கட்சியின் ஆதிதிராவிட நல அணி மாநிலச் செயலாளர் திரு.சிட்கோ சிவா அவர்கள் தலைமையில், கோவை சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் தொழிலாளர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி, சிட்கோ அலுவலகத்தில் தொழிற்சங்கக் கொடியேற்றிவைக்கப்பட்டு, தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
தொண்டாமுத்தூர் மநீம மாவட்டச் செயலாளர் திரு.மோகன்ராஜ், முன்னாள் மாவட்டச் செயலாளர் திரு. தம்புராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் தொழிற்சங்கப் பேரவையினர் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம்