மார்ச் 22, 2025
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையேற்க, துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநில செயலாளர்கள், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை நிலையத்தில் இன்று (22.03.2025) சிறப்பாக நடைபெற்றது. அமைப்பு மற்றும் சார்பு அணிகளைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் வந்திருந்தனர்.
வரவிருக்கும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் பொருட்டு தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஈடுபடவேண்டிய அனைத்து நகர்வுகளையும் திட்டமிடுதல் குறித்தும் தலைவர் அவர்கள் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தலைமை அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.




நமது தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் !
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் 22-03-2025 சனிக்கிழமை அன்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
காலை சுமார் 11:30 மணி துவங்கி மதியம் 1:15 மணி வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து திரு. கமல்ஹாசன் அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், துணைத் தலைவர்களான திரு.மௌரியா, திரு.தங்கவேலு, பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். – மக்கள் நீதி மய்யம்
https://twitter.com/Maiatamizhargal/status/1903487260563243511
நன்றி : மக்கள் நீதி மய்யம் & செய்தி நாளிதழ்கள், சமூக ஊடகங்கள்