சென்னை ஏப்ரல் 16, 2022
மீன்பிடி தடைக்காலம் தொடங்கிவிட்டது. அடுத்த 61 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது. மீனவர்களுக்கான நிவாரண தொகையை ரூ.10,000/- ஆக உயர்த்தி, தாமதமின்றி வழங்க தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்.
கடலை நம்பி அதில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை நம்பி கறை மேல் வாழும் மீனவர்கள் இனி வரும் 61 நாட்களுக்கு மீன் பிடிக்க முடியாது ஏன் என்றால் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்கள் ஆதலால் இந்த நடைமுறை தொன்று தொட்டு இருந்து வருகிறது. எனவே மேற்குறிப்பிட்ட காலத்தில் தங்கள் குடும்ப அன்றாட செலவுகளுக்கு சிறப்பட வேண்டிய கட்டாயம் உண்டாகிறது. எனவே தமிழக அரசு அதனை கருத்தில் கொண்டு கடலுக்கு செல்லமுடியாத மீனவர்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய் 10000/- ஆக உயர்த்தித் தரவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ளது.
