மார்ச் : 03, 2025

இன்று தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத்தேர்வு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது வாழ்த்தினை தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களே, எவ்வித அச்சமும், பதற்றமும் இல்லாமல், துணிச்சலுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை இந்திய மாநிலங்களிலேயே அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அந்தப் பெருமையை உயர வைப்பதில் உங்கள் பங்கும் உள்ளது. அருமையாகத் தயாராகியிருப்பீர்கள்.

உங்கள் உழைப்பின் பலனை அறுவடை செய்யும் காலம் இது. தேர்வை சிறப்பாகச் செய்வதில் மட்டுமே உங்கள் முழுக் கவனமும் இருக்கட்டும். முடிவுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

பொதுத் தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது நல் வாழ்த்துகள்.

  • திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/ikamalhaasan/status/1896398860714410276

https://twitter.com/maiamofficial/status/1896448484859142479

“பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வாழ்த்துகள்.” – மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/Maiatamizhargal/status/1896586127953522899

https://twitter.com/KHWelfareNA/status/1896405475920691307

#KamalHaasan# MakkalNeedhiMaiam #பொதுத்தேர்வு2025