காஞ்சிபுரம் : மார்ச் 22, 2௦23
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ள தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்கள்.
மக்கள் நீதி மய்யம் தலைவரின் இரங்கல் செய்தியும் தமிழ்நாடு அரசின் முன் வைத்த வலியுறுத்தலும் :
“காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்துச் செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்குத் தரமான சிகிச்சையும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணமும் உடனடியாக வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற கோர விபத்துக்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
