திருவண்ணாமலை ஏப்ரல் 28, 2022
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையை சேர்ந்த விக்னேஷ் எனும் குதிரை சவாரி பழக்குபவர் சந்தேகத்திற்கு இடையில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே நடந்த விசாரணையின் போது காவல் துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அதை மறைக்க இறந்த விக்னேஷ் என்பவரின் முதலாளியின் மூலமாக பணம் தந்தும் மிரட்டல் விடுத்துள்ளனர் காவலர்கள். பின்னர் சொந்த அண்ணனுக்கு கூட தெரியாமல் பிரேதத்தை கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் தகனமும் செய்து விட்டனர்.
இந்த மர்ம மரணம் பற்றி ஒரு சில கட்சிகள் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் வாய் திறக்காமல் அமைதியாய் இருந்தனர். சட்டசபையில் இரங்கல் தீர்மானமும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமும் எதிர்கட்சியான அதிமுக மூலம் கொண்டுவரப்பட்டது முக்கியமானது.
அந்த விசாரணை மரணம் நடந்து முடிந்த சில நாட்களில் திருவண்ணாமலையில் தங்கமணி என்பவரை சாராயம் காய்ச்சியதாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே விசாரணை நடத்தி இருக்கும்போது கட்டுக்கடங்காமல் அந்த காவல் நிலையத்தில் உள்ள போலீசார் கடுமையாக தாக்கியதால் தங்கமணி உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
குற்றம் இழைத்தது நீதிமன்ற நீதிபதி அவர்களின் ஆணைப்படி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நெறிமுறை தவறாது வன்முறை இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதே சட்டம்.
அதை விடுத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் நபர்களை கண்மூடித்தனமாக தாக்கி அவர்களுக்கு மரணம் ஏற்படுவதை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது.
