சென்னை ஜூலை 25, 2022
நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் 2019 ஆண்டிலேயே முன் வைத்த மகளிர் உதவித்தொகை திட்டத்தினை அப்படியே இம்மி பிசகாமல் திமுக தனது தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்து அதனை தேர்தல் பரப்புரையில் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்தது. ஆட்சியைப்பிடிக்க செய்த சூட்சுமம் என்று உணராத மக்களும் இந்த காப்பி (மக்கள் நீதி மய்யத்தின் திட்டமான இதை அப்படியே அப்பட்டமாக நகல் எடுத்த திமுக) திட்டத்தினை நம்பினார்கள்.
அந்தோ பரிதாபம் ஆட்சியை பிடித்த திமுக 15 மாதங்கள் கடந்தும் இன்னும் சொன்னதை நிறைவேற்றாமல் தவிர்க்கப் பார்க்கிறார்கள் என தெரிய வருகிறது. அப்படியே தருவதாக இருந்தாலும் அதிலும் பல விதிமுறைகளை நுழைத்து அனைத்து மகளிருக்கும் தருவதாக சொன்னதை விடுத்து தகுதியானவர்களுக்கு தருவதற்கு வழிவகை செய்யப்படும் என்று மாண்புமிகு நிதியமைச்சர் சொல்லியிருப்பது நிச்சயம் நகைப்புக்குரியது. இது கொடுத்த வாக்கினை காற்றில் பறக்க விட்டதற்கு சமமாகும்.

