ஜனவரி 31, 2025
வருகின்ற பிப்ரவரி மாதம் 21 தேதியன்று நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எட்டாவது ஆண்டு துவங்குகிறது. அதனை முன்னிட்டு பொள்ளாச்சியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இயற்கையின் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் இந்நிகழ்வை மகளிர் அணி மாநில செயலாளர் திருமதி மூகாம்பிகா ரத்னம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். கோவை மாவட்ட மய்யம் நிர்வாகிகள் அனைவரும் பங்கு கொண்டனர்.

“மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, பொள்ளாச்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு. மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கட்சியின் துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் தலைமை வகித்தார். மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி.மூகாம்பிகா ரத்னம் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் திருமதி. சியாமளா அவர்கள் கலந்துகொண்டார். மேலும், கட்சியின் விவசாய அணி மாநிலச் செயலாளார் திரு. மயில்சாமி, கோவை மண்டலச் செயலாளர் திரு.ரங்கநாதன், நற்பணி அணி மண்டல அமைப்பாளர் திரு. முகமது சித்திக் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். – மக்கள் நீதி மய்யம்




#KamalHaasan #MakkalNeedhiMaiam #8thYearOfMNM #Sapling
நன்றி : மக்கள் நீதி மய்யம்