பிப்ரவரி 21, 2025

கட்டுரை புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 23, 2025

2018 ஆம் ஆண்டில் பிப்ரவரி 21 அன்று திரு.கமல்ஹாசன் அவர்களால் துவங்கப்பட்டது மக்கள் நீதி மய்யம் கட்சி. நற்பணியில் நாற்பது ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் அவரை பின்பற்றி வரும் ரசிகர்கள். மக்களின் தேவை என்ன என்பதையும் அதிகாரமும் பதவியும் கிடைக்கும்பட்சத்தில் நற்பணியை அரசு திட்டங்களாக பரந்துபட்ட அளவில் செய்து தர முடியும் என்று துவக்கப்பட்டதே இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகள் என எதோ ஓர் பக்கம் சென்றடைந்து விடாமல் நலன் எதுவோ அதன் பக்கம் நின்று அதை பெற்றுத் தருவதே நம் மய்யத்தின் நோக்கம் அதுவே கொள்கை என முழக்கத்துடன் தொடங்கியது நம்மவர் தலைவரின் அரசியல் பயணம்.

ஒவ்வொரு நாளும் ஓய்வில்லாமல் உழைக்கும் மகளிர்க்கு ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகை, எளிய மாணவர்கள் பயின்றிட இணையவசதி, படிப்படியாக குறைத்திடும் டாஸ்மாக் இப்படி பல சிறப்புகளை உள்ளடக்கிய ஓர் எளிய அரசியலை மக்கள் முன் வைத்திட்ட தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள். நாட்டின் வளர்ச்சிக்கு திட்டங்கள் எது உதவுமோ அவற்றை அமலாக்குதல், அப்படி அமலாக்கப்படும் திட்டம் மக்களின் நலனை சீர்குலையச் செய்திடும் எனில் அந்த திட்டத்தை கைவிடுதல் என்று தீர்மானமாக முடிவு செய்வதே நடுவுநிலைமை எனும் மய்யக் கொள்கை இவற்றையே முன்னிறுத்தி செய்த அரசியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது எனலாம்.

இதுநாள் வரை மறைத்து வைக்கப்பட்டிருந்த கிராம சபை ஏரியா சபை என்பதை வெளிக்கொண்டு வந்ததும் மக்கள் நீதி மய்யம் தான்.

மக்கள் நலனே மய்யத்தின் கொள்கை 7. இதன் எண்ணிக்கை என்னவோ ஏழு தான் ஆனால் எண்ணிக்கையில் அடங்கிடாத கொள்கைகள் இன்னும் பல உண்டு என்பதை இதுநாள்வரை அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள்.

சாதி களைவோம். சமத்துவம் காப்போம்.

அரசு இயந்திரங்களின் / இயக்கங்களின் முறைகேடுகளை அறவே அழிப்போம்.

 கல்வியில் சமத்துவமும் சர்வதேசத் தரமும் எய்துவோம்.

நீர் பெருக்கி நிலம் காப்போம்.

தொன்மை போற்றுவோம் தொழில்கள் தேற்றுவோம்.

தமிழர் இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுப்போம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியாக உருவெடுக்கும் முன்னர் பன்னெடுங்காலமாக கமல்ஹாசன் ரசிகர் மன்றம் என்று இயங்கிவந்தது, அதனை வழிநடத்தி வந்தவர் நம்மவர் தான். ஒரு காலகட்டத்தில் நான் நடிகன் எனது வேலை நடிப்பு அதற்கான சம்பளம் வாங்கிக் கொள்கிறேன். இதற்கு எனக்கு என் படங்களுக்கு மாலை போட்டு வரவேற்பதும் தியட்டர்களில் இனிப்பு கொடுத்து கட் அவுட் வைத்தும் தங்களது பணத்தையும் நேரத்தையும் வீணாக்கி வருகிறார்களே நம் ரசிகர்கள் என்று உணர்ந்த நேரமது. அந்த காலகட்டம் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய சினிமாவுலகில் உச்ச நடிகராக பரிணமித்துக் கொண்டிருந்த நேரம். அவ்வேளையில் ஓர் நடிகரை உயர்த்திப் பிடித்து கோஷம் போட்டு முன்னிறுத்த ரசிகர்கள் நிச்சயம் அவசியம், என்கிற நிலையில் துணிச்சலாக ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு அதனை மக்களுக்கு உபயோகம் தருவதாகவும் அதே சமையம் தன்னை நேசிக்கும் ரசிகர்களின் நேரமும் பணமும் அத்தியாவசிய தேவைகளுக்கு செலவிடும் வகையில் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் என்று ஓர் அமைப்பை உருவாக்கி அனைவர்க்கும் முன்னுதாரனமான ஓர் காரியத்தை செய்தார். சுமார் 40 முதல் 48 ஆண்டுகளாக செய்துவரும் நற்பணி இயக்கத்தை அரசியல் அதிகாரம் பெரும் வகையில் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியாக மாற்றம் செய்து அதனை தலைமையேற்று இதோ இன்றுடன் எட்டாவது ஆண்டில் நுழைய வைத்துள்ளார் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்.

அதன் ஆண்டுவிழவான இன்று தலைமை நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை தாங்கி கட்சிக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் மிக குறிப்பிடத்தக்க அம்சங்களை குறிப்பிட்டு பேசியுள்ளது பல இடங்களில் பல அரசியல் மேடைகளில் விவாதங்கள் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு விழாவில் நடைபெற்ற அனைத்து நிகழ்சிகளும் இங்கே பல செய்தி நிறுவனங்கள் தங்களின் சமூக ஊடக கணக்குகள் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது அதன் இணைப்புகளை கீழே இணைத்துள்ளோம்.

இந்தாண்டு நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்கும்- ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்- Our voice will be heard in Parliament this year – MLA Kamal Haasan

இந்தாண்டு பார்லி., அடுத்தாண்டு சட்டசபையில்; கமல்ஹாசன் உற்சாகம்

நாடாளுமன்றத்தில் மநீம குரல் ஒலிக்கப் போகிறது: கமல்ஹாசன்

https://tamiljanam.com/91360482

Our voice will be heard in Parliament this year, and in State Assembly in 2026: Kamal Haasan – The Hindu

‘My voice will be heard in Parliament’ | Chennai News – The Times of India

🔴LIVE : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேச்சு

20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வராதது தோல்வி: கமல்ஹாசன் பேச்சு – Dinakaran

Kamal Hassan | இந்தாண்டு நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்! கமல்ஹாசன் ஆவேச பேச்சு! – Kamal Haasan’s Powerful Speech: Our Voice in Parliament This – Asianet News Tamil

இந்தாண்டு நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்கும்- மநீம தலைவர் கமல்ஹாசன் – லங்காசிறி நியூஸ்

Kamal Haasan’s Speech At MNM’s 8th Anniversary Addresses 3 language issue Of New Educational Policy At Chennai | 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!

மநீம 8ஆம் ஆண்டு விழா: ’இந்த வருடம் பாராளுமன்றம்; அடுத்த வருடம் சட்டமன்றம்’ கமல்ஹாசன் பேச்சு!

நன்றி : மக்கள் நீதி மய்யம் மற்றும் செய்தி இணையதளங்கள், சமூக ஊடகங்கள்