அலங்காநல்லூர் : மே 09, 2025
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்காற்ற வேண்டிய பணிகள் குறித்தும், பூத் கமிட்டி அமைப்பு, கட்சியின் கட்டமைப்பை விரிவுப்படுதுதல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் ஆகியவை நிறைவேற்றப்பட்டன. ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் திரு.ரமேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


அலங்காநல்லூரில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்டச் செயலாளர் திரு. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத் துணைச் செயலாளர் திரு. விமல்ராஜ், பொருளாளர் திரு. ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மண்டலச் செயலாளர் திரு. அழகர், வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. அயூப்கான் ஆகியோர் உரையாற்றினர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள், பூத் கமிட்டி அமைத்தல், கட்சியின் கட்டமைப்பை விரிவுபடுத்தல், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு, மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள், செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தல் உள்ளிட்டவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியச் செயலாளர்கள் திரு. ரவி, திரு. யோகநாதன் மற்றும் ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம்