சென்னை : ஏப்ரல் 04, 2025

வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எதிர்கொள்வதை அடுத்து தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தின் நிர்வாகிகள் கொண்டு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

அதன்படி அம்பத்தூர் ம.நீ.ம மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள் முன்னிலை வகிக்க சென்னை மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் தலைமை வகித்தார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அம்பத்தூர் மாவட்டச் செயலாளர் திரு.A.தனபாலன் அவர்கள் செய்திருந்தார். தொகுதியில் உள்ள வார்டுகள் அனைத்திற்கும் பொறுப்பாளர்களை நியமிப்பதும் பூத் ஏஜென்ட்கள் நியமனம் செய்வதும், கட்சி வளர்ச்சிப் பணிகள், புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அம்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அம்பத்தூர் மநீம நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்பேரில், சென்னை அம்பத்தூர் மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் சென்னை மண்டலச் செயலாளர் திரு.மயில்வாகனன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் திரு.A.தனபாலன் அவர்கள் செய்திருந்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ஒவ்வொரு வார்டுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, வாக்குச்சாவடி மையங்களுக்கு பூத் ஏஜென்ட்கள் நியமனம் செய்வது மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள், புதிய உறுப்பினர் சேர்ப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதில் மக்கள் நீதி மய்யம் வட்டச் செயலாளர்கள் திரு. நவசேகர், திரு. உமாசங்கர், கிளைச் செயலாளர் திரு. மனோகர், உறுப்பினர்கள் திரு. செந்தில், திரு. மதனகோபால், திரு. முருகன், திரு. ஜெய்கிருஷ்ணன், திரு. சிவக்குமார், திரு. ரவி, திரு. ராமன், திரு. மணி, திரு. அமரேஷ், திரு. மனோகர், திரு. சுரேஷ் , திரு. குமார், திரு. மோனிஷ், திருமதி. சரஸ்வதி, திருமதி. சந்தான லட்சுமி, திருமதி. ரோஹிணி உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

நன்றி : மக்கள் நீதி மய்யம்