கோயம்புத்தூர் : 03, ஏப்ரல் 2025
தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதிதிராவிடர் அணியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோயமுத்தூர் மாவட்டம் ம.நீ.ம அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளில் பொறுப்பேற்ற புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.
மேலும் ஆலோசனை கூட்டத்தில் ஆதிதிராவிடர் நல அணியின் செயல்பாடுகள் குறித்தும் அதனை வலுப்படுத்துதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வரவிருக்கும் சட்டபேரவை தேர்தலை எதிர்கொள்வது மற்றும் பூத் கமிட்டியை அமைப்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிகழ்வை ஆதிதிராவிடர் நல அணியின் மாநில செயலாளர் திரு.சிட்கோ ரவி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட, நகர, வட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.




“மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதிதிராவிடர் நல அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, ஆதிதிராவிடர் நல அணி மாநிலச் செயலாளர் திரு.சிட்கோ சிவா தலைமையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் தொகுதிகளின் ஆதிதிராவிடர் நல அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு பகுதிகளைச் சேர்ந்த புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது, பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாட்டுப் பணிகள், ஆதிதிராவிடர் நல அணியை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், ஆதிதிராவிடர் நல அணியின் மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம்