மார்ச் : 24, 2025

இன்றைய உலகில் இணையத்தளம் முக்கியமான ஒன்று. அதிலும் சமூக ஊடகங்கள் மிக முக்கியமாக பங்காற்றுகிறது. வெள்ளித்திரை சினிமா துவங்கி சின்னத்திரை தொலைக்காட்சி என அனைத்தும் இணையம் வசதிகளோடு இயங்கி வருகிறது. அதிலும் கையகல திரையுள்ள அலைபேசியில் உலகமே சுருங்கி விட்டார் போல அனைத்தும் காண கேட்க கிடைக்கிறது.

உலகின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்த நொடிகளில் செய்திகள் வாயிலாக உடனுக்குடன் நமது கைகளில் இருக்கும் சாதனங்கள் வழியாக கிடைத்து விடுகிறது. செய்தி சேனல்கள் என துவங்கிய சமூக ஊடகம் முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக கணக்குகள் மூலமாக வெவ்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் ஒருவரை ஒருவர் அறியாமலே நண்பர்களாக தங்களை இணைத்துக் கொள்வது தொடங்கி இன்று வரை அதன் தாக்கம் வெகு வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது திரைப்படத்தில் ஓர் வசனம் வைத்திருந்தார் “இவ்வுலகில் இயற்கை ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம் ஏராளம்” அது போல் இயற்கையுடன் இயைந்து போகும் வாழ்வினூடே மனிதனால் அறிவியல் மூலம் உருவாக்கப்பட்ட பலவும் அதே வாழ்வோடு இணைந்தும் வருகிறது. அந்தப் பட்டியலில் இணைந்திருப்பது சமூக ஊடகமும் ஒன்று.

ஒரு பொருளை விற்பனைக்கு சந்தைப்படுத்தல் தொடங்கி மக்களின் மனதில் அழுந்தப் பதியவைக்க சமூக ஊடகம் பெரும்பங்கு ஆற்றி வருகிறது. அவ்வகையில் கட்சியின் களப்பணிகளில் ஈடுபடும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அடுத்து சமூக ஊடக அணியும் பெரும்பங்கு ஆற்றி வருகிறது.

அதனாலேயே ஒவ்வொரு கட்சியிலும் சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்ப அணி என ஒரு சார்பு அணி நிர்வகித்து வரப்படுகிறது. அதன் மாவட்ட, மண்டல மற்றும் வட்ட நிர்வாகிகள் என பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றி வருகின்றனர். கட்சியை பொதுமக்களின் கைகளில் வைத்துள்ள அலைபேசி உள்ளிட்ட உபகரணங்கள் வழியாக கொண்டு செல்வதில் சமூக ஊடக மற்றும் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் முக்கிய காரணகர்த்தாக்கள். எனவே அவர்களுக்கு அது பற்றிய விழிப்புணர்வும் அதனால் ஏற்படக்கூடிய பெரும் மாற்றங்களை மிகச்சரியாக புரிந்து கொண்டு தொடர்ச்சியாக திறம்பட பணியாற்றவும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்ப மாநில செயலாளர் தொடங்கி மண்டல அமைப்பாளர், மாவட்ட அமைப்பாளர் என அதற்கான பயிற்சிப் பட்டறையை தொடர்ந்து நடத்தி வருவது சிறப்பு. அதனை கருத்தில்கொண்டு மற்றும் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி பயிற்சிப்பட்டறை அணி திரு.ஸ்ரீதர் அவர்களின் ஏற்பாட்டில் கோவை வடக்கு தொகுதியில் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த பயிற்சிப்பட்டறை நிகழ்வில் கோவை மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.