சிங்காநல்லூர் : மார்ச் 09, 2025
தலைவரின் கருத்தின்படி சர்வதேச மகளிர் தின விழாவினை கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் மக்களுடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.


மக்கள் நீதி மய்யம் கோவை சிங்காநல்லூர் தலைமை அலுவலகத்தில், 08/03/2025 சனிக்கிழமை மாலை, மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள், மாவட்டச் செயலாளர் மயில் கே கணேஷ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், மண்டலச் செயலாளர் ரங்கநாதன் அவர்கள் கலந்து கொண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்புரையாற்றினார்கள்.
கேக் வெட்டி, வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட இந்த நிகழ்வில், கலை நிகழ்ச்சிகள் நடத்தி, இரவு உணவு வழங்கப்பட்டது.
மண்டல அமைப்பாளர் தாஜுதீன் மற்றும் மாவட்டச் செயலாளர் வரதராஜ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட இந்த விழாவை, சிங்காநல்லூர் மாவட்ட மகளிர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். – மக்கள் நீதி மய்யம்
#WomensDay #MakkalNeedhiMaiam #KamalHaasan
நன்றி : மக்கள் நீதி மய்யம்