சிங்காநல்லூர் : மார்ச் 03, 2025

வருகின்ற 2026 ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தேர்தல் வாக்குச்சாவடிகளில் பூத் முகவர்களை நியமிப்பது நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ந்து சிங்காநல்லூர் தொகுதியிலும் அதற்கான பணிகள் முழு மூச்சுடன் நடைபெற்று வருகிறது. அது தொடர்பாக ஏற்படும் அனைத்து ஐயங்களையும் தெளிவுற அறிந்து கொள்ளும் வகையில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி துணைத்தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் தலைமையில், கோவை மண்டல அமைப்பாளர் திரு.ரங்கநாதன் அவர்கள் முன்னிலை வகிக்க பயிற்சிப் பட்டறை அணி மண்டல அமைப்பாளர் திரு.ஸ்ரீதர் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடந்த இந்நிகழ்வினை நகரச் செயலாளர் திரு. மயில் K கணேஷ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் சமூக ஊடக அணியின் நிர்வாகிகள் எவ்வாறு அதில் பங்காற்றுவது என்பது குறித்தும் விளக்கிடும் வகையில் சமூக ஊடக அணி மண்டல அமைப்பாளர் திரு.தாஜுதீன் அவர்கள் பயிற்சிகள் அளித்தார்.

சிங்காநல்லூர் மக்கள் நீதி மய்யம் சார்பில் பயிற்சி பட்டறை மற்றும் பூத் கமிட்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, சிங்காநல்லூர் மாவட்டம் சார்பாக சமூக ஊடகம் சார்ந்த பயிற்சி பட்டறை சிறப்பாக நடைபெற்றது. கட்சியின் துணைத் தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் தலைமையில், மண்டலச் செயலாளர் திரு.ரங்கநாதன் அவர்கள் முன்னிலையில், பயிற்சி பட்டறை அணி மண்டல அமைப்பாளர் திரு. ஶ்ரீதர் அவர்கள் ஒருங்கிணைத்த இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் திரு. மயில் K.கணேஷ் அவர்கள் செய்திருந்தார்.

ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மண்டல அமைப்பாளர் திரு.செவ்வேல், மற்றும் மாவட்ட, மாநகர, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் சமூக ஊடக அணி மண்டல அமைப்பாளர் திரு.தாஜுதீன் அவர்கள் சமூக ஊடகங்களில் சிறப்பாகச் செயல்படுவது குறித்து பல்வேறு பயிற்சிகள் அளித்தார்.

மேலும், பூத் கமிட்டி உறுப்பினர் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. – மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/Maiatamizhargal/status/1906730843298738631

வாருங்கள் மய்ய உறவுகளே ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம். தலைவரின் கரங்களை வலுப்படுத்துவோம்.

நன்றி : மக்கள் நீதி மய்யம்