ஈரோடு : ஏப்ரல் 06, 2025

நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கட்சியின் அரசியல் செயல்பாடுகள் மக்களுக்கான பணிகள் என தொடர்ச்சியாக களத்தில் இயங்கிவருவது குறித்தும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள், பூத் கமிட்டி அமைப்பதும், செயல்பாடுகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தல் அதனால் அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை என்பது என பல முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு.மௌரியா, திரு.தங்கவேலு ஆகியோர் தலைமை வகித்தனர். கோவை மண்டலச் செயலாளர் திரு.ரங்கநாதன், மாநிலச் செயலாளர்கள் திரு. G.மயில்சாமி, திரு.லக்ஷ்மன், திரு.சிட்கோ சிவா, மண்டல அமைப்பாளர்கள் திரு. சித்திக், திரு. சிராஜ்தீன், திரு. ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

https://twitter.com/maiamofficial/status/1908833237763600401

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஈரோடு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை டால்பின் ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

கட்சியின் துணைத் தலைவர்கள் திரு.மௌரியா (Rtd IPS), திரு.தங்கவேலு ஆகியோர் தலைமை வகித்தனர். கோவை மண்டலச் செயலாளர் திரு.ரங்கநாதன், மாநிலச் செயலாளர்கள் திரு. G.மயில்சாமி, திரு.லக்ஷ்மன், திரு.சிட்கோ சிவா, மண்டல அமைப்பாளர்கள் திரு. சித்திக், திரு. சிராஜ்தீன், திரு. ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையொட்டி, கட்சிக் கொடியேற்றி வைக்கப்பட்டது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள், பூத் கமிட்டி அமைத்தல், கட்சியின் கொள்கைகள், நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தல், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யம் பெருந்துறை மாவட்டச் செயலாளர் திரு.முருகன் ஒருங்கிணைப்பில், மாவட்டச் செயலாளர்கள் திரு. முரளி கிருஷ்ணன் (ஈரோடு மேற்கு), திரு. சிவக்குமார் (கோபிசெட்டிபாளையம்), திரு. சசிகுமார் (மொடக்குறிச்சி), திரு. நயினார் (பவானி), திரு. பழனிவேல் (சத்தியமங்கலம்) ஆகியோர் செய்திருந்தனர்.

– மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/Maiatamizhargal/status/1909224638359482706