ஏப்ரல் 03, 2024
இம்மாதம் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் களமிறங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் மற்றும் விசிகவின் மற்றுமொரு வேட்பாளரான திரு.ரவிகுமார் போட்டியிடும் விழுப்புரம் தொகுதி என இரண்டு தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரிக்கவிருக்கிறார், அதிகாரப்பூர்வ செய்தியாக ம.நீ.ம தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது, அதற்கான நேரலை ஒளிபரப்பின் லிங்க் கீழே பதியப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது மய்யத்தமிழர்கள்.com




