பிப்ரவரி : 01, 2025
இந்திய பாராளுமன்றத்தில் ஆளும் பாஜக அரசு சார்பாக இன்று 2025 இன் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கம் போலவே இந்த வருடமும் தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடுகள் ஏதுமில்லை. நடப்பு ஆண்டில் பீகார் மாநிலத்தில் சட்டமன்ற பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் பல சலுகைகள் அளிக்கும்படி நிதி ஒதுக்கீடுகள் இருப்பதாக பல கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் ஒன்றிய அரசின் கடந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை NDA அரசின் அறிக்கை தான் ஆனால் நாம் எதிர்பார்த்தது போல் இந்தியாவின் நிதிநிலை அறிக்கை அல்ல என்ற இடித்துரைத்தல் இந்தியா முழுதும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதே போல் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையும் வழக்கம்போல் எந்த எதிர்பார்ப்பையும் நிறைவேற்றவில்லை என்று தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் திரு.கமல்ஹாசன் அவர்கள்.
“It’s disappointing that the Union Government has once again ignored Tamil Nadu’s critical development needs. States that perform well economically deserve consistent support in the Union Budget, not just pre-election rewards. Fortunately, Tamil Nadu’s turn will come in 2026? Lip service to India’s farmers continues, with no legal guarantee for MSP. Our farmers, the backbone of the nation, deserve more than empty promises. However, I appreciate the progressive income tax reforms that empower taxpayers, the true drivers of our economy. Makkal Needhi Maiam will continue to champion any policy that bolsters development through domestic demand and empowers the Indian common man.” – Dr. Kamal Haasan, President – Makkal Needhi Maiam
“Once again Tamil Nadu has been ignored” Kamal Haasan slams the Union budget while appreciating the tax reforms. – Makkal Needhi Maiam

#KamalHaasan #MakkalNeedhiMaiam #Budget2025