மே 29, 2025
தமிழ்த்திரையுலகில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் திரு.ராஜேஷ் அவர்கள். 1979 இல் கன்னிப்பருவத்திலே எனும் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இயக்குனர் சிகரம் திரு.பாலச்சந்தர் அவர்களின் அச்சமில்லை அச்சமில்லை என்கிற படத்திலும் நடித்துள்ளார். அதன்பிறகான பல படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு நெருக்கமான நண்பரான ராஜேஷ் அவர்கள் நம்மவரின் பல படங்களில் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றார். உடல்நலகுறைவால் தமது 75 வயதில் இன்று இயற்கை எய்தினார். தனது நண்பரின் மறைவை கேட்டு தமது ட்விட்டர் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார் நம் தலைவர் அவர்கள்.

“தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ். தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம்