வில்லிவாக்கம் (சென்னை) ஏப்ரல் 01, 2025
கோடைகாலம் துவங்கவிருக்கிறது. ஆயினும் தற்போது வெயில் தகிக்கிறது. இந்த வேளையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஒவ்வொரு தொகுதியிலும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர், பழரசம் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்சிகளை ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். அவ்வகையில் மய்யம் கட்சியின் நிர்வாகிகள் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நற்பணி செய்யும் எண்ணம் தாங்கி அதற்கு செயல்வடிவம் தந்து வருகிறார்கள்.
அதன்படி வில்லிவாக்கம் தொகுதி நிர்வாகிகள் சார்பில் மாவட்டச் செயலாளர் திரு.கமல் கோமகன் அவர்கள் தலைமையில் நீர் மோர் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை சிறப்புற நடத்தினார்கள். இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக கட்சியின் துணைத்தலைவர் திரு.மௌரியா அவர்கள், சென்னை மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் மற்றும் மாநில இணைச் செயலாளர் திரு.M.K.S.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் குடிநீர் வழங்கினார்கள். பொறியாளர் அணி நிர்வாகிகள் மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு மாவட்டச் செயலாளர் உடனிருந்து நிகழ்ச்சியை சிறப்புற நடத்தினார்கள்.




“மக்கள் நீதி மய்யம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் பொதுமக்களுக்கு நீர், மோர், குடிநீர் வழங்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது ஆலோசனையின்பேரில், வில்லிவாக்கம் தொகுதி நிர்வாகிகள் சார்பில், மாவட்டச் செயலாளர் திரு.கமல் கோமகன் தலைமையில், ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர், மோர், ரோஸ்மில்க், பால் சர்பத், மேங்கோ ஜூஸ், பாதாம் மில்க், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.
கட்சியின் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா (Rtd IPS), சென்னை மண்டலச் செயலாளர் திரு.மயில்வாகனன், மாநில இணைச் செயலாளர் Dr.M.K.S.சுரேஷ், பொறியாளர் அணி மண்டல அமைப்பாளர் திரு. P.சரவணகுமார், நம்மவர் பேரவை மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு. ஜிம் மாடசாமி ஆகியோர் பங்கேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நீர், மோர் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
மாவட்டச் செயலாளர் திரு. விஸ்வநாதன், மாவட்டப் பொருளாளர் திரு. ஹரி, சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. நான்சி பிரிசில்லா, பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. கபாலி, நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. சதீஷ்குமார், நற்பணி அணி மாவட்ட துணை அமைப்பாளர் திருமதி. பத்மா, நகரச் செயலாளர்கள் திரு. ரவிச்சந்திரன், திரு. நாகேஸ்வராவ், திரு. ராஜேந்திரன், வட்டச் செயலாளர்கள் திரு. அருள், திரு. லட்சுமணன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம்