அக்டோபர் 31, 2024
தீபஒளி திருநாள் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்படுகிறது. எந்தவித பாரபட்சமும் இன்றி அனைத்து மக்களும் கொண்டாடுவார்கள். குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் உண்டு புத்தாடைகள் அணிந்து அகம் மகிழும் நாளே தீபாவளி.
தீபாவளி திருநாளையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“இந்தியா முழுமையும் மகிழ்ந்து கொண்டாடும் ஒருநாள் தீபாவளி. இல்லமெங்கும் மகிழ்ச்சி உள்ளமெங்கும் மலர்ச்சி என இந்த ஒளிநாளில் அனைவர் மனதிலும் உற்சாகம் நிறைய வாழ்த்துகிறேன்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்


https://twitter.com/Maiatamizhargal/status/1851921934507802728