புதுச்சேரி : மே 10, 2025
புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கூட்டணி அரசின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள ஊழலின் விபரங்கள் அடங்கிய பட்டியலை புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான இந்திய தேசிய காங்கிரஸ் தலைவருமான திரு.வைத்தியலிங்கம் அவர்களும் இந்தியா கூட்டணி சார்பில் ஆளுநர் திரு.குனியில் கைலாசநாதன் அவர்களிடம் அளிக்கப்பட்டது. உடன் மக்கள் நீதி மய்யம் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் திரு.G.A.சந்திரமோகன் அவர்களும் புறநகர் பொதுச்செயலாளர் திரு.ப.முருகேசன் அவர்களும் கலந்து கொண்டனர்.


புதுச்சேரி ஆளுநரிடம் ஊழல் புகார் ஒப்படைப்பும், பந்த் அறிவிப்பும்.
மக்கள் நீதி மய்யம் சார்பாக புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் திரு.சந்திரமோகன் அவர்கள் பங்கேற்க, புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. வைத்திலிங்கம் MP (Ex-CM) தலைமையில், புதுச்சேரி மாநிலத்தில் ஆளுகின்ற என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. அரசாங்கத்தின் ஊழல் குற்றச்சாட்டுகளை வரிசைப்படுத்தி, இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பாக புதுச்சேரி மாநில கவர்னர் திரு. குனியில் கைலாசநாதன் அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் திரு. G.R. சந்திரமோகன் உரையாற்றினார். புறநகர பொதுச்செயலாளர் திரு. ப.முருகேசன் அவர்களும் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் தொழிலாளர் நலம் சார்ந்து புதுச்சேரி மாநிலம் தழுவிய பந்த் மே 20ஆம் தேதி நடத்தப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம்