சைதாபேட்டை 14, 2025

தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் காட்டிய வழியில் நற்பணியில் நமது மய்யம் உறவுகளும் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களுக்கான சேவையில் என்றும் தங்களை இணைத்துக் கொள்வது அவர்களின் தலையாய கடமையென செய்துவருகிறார்கள். அதன்படி சைதாபேட்டையில் இலவச சட்ட ஆலோசனை மற்றும் இலவச மருத்துவ முகாம் மாவட்டச் செயலாளர் திரு.சைதை கதிர் அவர்களின் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் சைதாப்பேட்டையில் இலவச மருத்துவ மற்றும் சட்ட ஆலோசனை முகாம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்பேரில், சைதாப்பேட்டை மநீம மாவட்டம் சார்பில் இலவச மருத்துவ மற்றும் சட்ட ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது. மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சென்னை மாநகராட்சி 142-வது வார்டுக்கு உட்பட்ட சாமியார் தோட்டம் சமூகநலக் கூடத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம், சென்னை மண்டலச் செயலாளர் திரு.மயில்வாகனன் ஆகியோரின் முன்னிலையில், சைதாப்பேட்டை மாநகரச் செயலாளர் திரு. A. G. சின்னைய்யா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சைதாப்பேட்டை மாவட்டச் செயலாளர் திரு.சைதை கதிர் அவர்கள் செய்திருந்தார்.

நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்களால், 100-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், லஞ்ச் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது. அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், இலவச சட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

மேலும் நிகழ்வில் சைதாப்பேட்டை மநீம மாவட்டத்தின் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கான 52 விண்ணப்பபடிவங்கள் பொதுச் செயலாளர் அவர்களிடம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் மண்டல அமைப்பாளர் திரு. சேகர், மாவட்ட பொருளாளர் திரு. ரயில். ப. சண்முகம், மாவட்டத் துணை செயலாளர்கள் திரு. கோவிந்தராஜூலு, திரு. B. L. அசோக் ஆனந்த், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. V. P. முனுசாமி (நற்பணி). திரு. N. குமார் (மீனவரணி), திருமதி. M. சுபாஷினி (மகளிரணி), திரு. சஞ்சீவிராமன் (இளைஞரணி), ஜி. ரமேஷ் கண்ணா (வழக்கறிஞர் அணி), திரு. சந்தர் (தொழிலாளர் அணி), மாவட்ட துணை அமைப்பாளர் திரு. R. மோகன்ராஜ் (வழக்கறிஞர் அணி), மாவட்ட துணை அமைப்பாளர் திரு. சுல்தான் பாஷா (நற்பணி அணி), மாநகர செயலாளர்கள் திரு. M. P. M. வெற்றிச்செல்வன், திரு. E. L. லத்தீப் ஹாசன், திரு. விஜயகுமார், வட்ட செயலாளர்கள் திரு. P. முருகன், திரு. A. ராஜேந்திர குமார், திரு. சக்திவேல், திரு. சங்கர், திரு. முரளிதரன், திரு. முத்துக்குமரன், கிளை செயலாளர்கள் திரு. V. ஆறுமுகம், திரு. P. ஆறுமுகம், திருமதி. பாக்கியம், திரு. விசு, திருமதி. திவ்யா, திரு. சிவகுமார், திரு. சந்திரன், திரு. அன்வர் பாஷா, திரு. கவிதா மற்றும் திரு. பாக்கியம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்

0 Shares