சென்னை – ஏப்ரல் 29, 2025

மக்கள் நீதி மய்யம் சார்பாக நடைபெறும் நற்பணிகள் ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முழுதும் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது.

தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் எண்ணம் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் கோடை காலத்திற்கு வெயில் வெப்பம் தணிக்கும் வகையில் நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கிட ஆலோசனைகள் தந்ததன் பொருட்டு சென்னை மத்திய வடக்கு மாவட்டம் திரு.வி.க நகர் ம.நீ.ம மாவட்டம் நிர்வாகிகள் சார்பில் நீர் மோர் வழங்கும் விழா கடந்த ஞாயிறன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கட்சியின் பொதுச்செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம் அவர்கள் பங்கு கொள்ள பெரம்பூர் திரு.வி.க நகர் மாவட்ட செயலாளர் திரு.V.உதயகுமார் அவர்கள் தலைமையிலும் இனிதே நடந்தது. நிகழ்ச்சியை ஏற்பாடுகளை துணை மாவட்டச் செயலாளர் திரு.சின்ன துரை அவர்கள், கிளைச் செயலாளர் திரு.துரைராஜ் அவர்களும் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தார்கள்.

மக்கள் நீதி மய்யம் சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள் விநியோகம்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி, திரு.வி.க. நகர் தொகுதியில் கோடை வெயிலால் தவிக்கும் மக்களுக்கு நீர் மோர், குளிர்பானங்கள், தர்பூசணி மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.

மாவட்டச் செயலாளர் திரு.V. உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள், பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட துணைச் செயலாளர் திரு. சின்னதுரை, கிளைச் செயலாளர் திரு. துரைராஜ் மற்றும் கட்சியினர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில், நகரச் செயலாளர்கள் திரு. வேலா, திரு. சேத்துப்பட்டு ரவி, வட்டச் செயலாளர்கள் திரு. சக்திவேல், திரு. பிரபாகரன், திரு மஜித், திரு. கார்த்திக், திரு. சீனிவாசன், கிளைச் செயலாளர்கள் திரு. ஆனந்த், திரு. பாலா, திரு. பன்னீர், திரு. மூர்த்தி, திரு. கண்ணன், திரு. ராஜேந்திரன், திரு. குமார், திரு. மணி, திரு. ராஜு, திரு. மாரி, திரு. ரவி, திரு. மணி, பெரம்பூர் தொகுதி நகரச் செயலாளர் திருமதி. ரேவதி, கிளை செயலாளர் திரு. பத்மநாபன், நம்மவர் தொழிசங்க பேரவை மாநில துணை செயலாளர் திரு.யுவராஜ், நிர்வாகி திரு.ராஜபுத்திரன் திரு.திரிஷாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்