விழுப்புரம் : ஏப்ரல் 01, 2025
2026 ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் எதிர்கொள்வது மற்றும் நிர்வாகிகளை வழிநடத்துவதும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், கிராம சபையின் முக்கியத்துவம் குறித்தும், மத்திய அரசின் மும்மொழி கொள்கை வழியாக இந்தி மொழி திணிப்பு, விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களுக்கு இலாபகரமான குறைந்த விலை விலை நிர்ணயம் செய்ய வேண்டியதையும், உரம் விலை உயர்வை கட்டுபடுத்துதல் போன்றவைகளை விவரித்து பேசினார் கட்சியின் பொதுச்செயலாளரான திரு.அருணாச்சலம் அவர்கள். அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் அனைவரையும் நமது தலைவரின் அரசியல் நகர்வுகள் முற்றிலும் நேர்மையும் கண்ணியமான நகர்வுகளையும் கொண்டது என்றும் அவரது தலைமையில் செயல்படும் நாம் சட்டமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் பிரதிநிதிகள் குரல் ஒலிக்க வேண்டியதற்கான அனைத்து கட்சிப் பணிகளையும் திறம்பட செய்திட வேண்டும் என்று உற்சாகம் கொள்ளும் விதமாக பொதுச்செயலாளர் பேசியது குறிப்பிடத்தக்கது.
“2026சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, கட்சியின் விழுப்புரம் மண்டலச் செயலாளர் திரு.ஸ்ரீபதி அவர்களின் ஒருங்கிணைப்பில், விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு.லக்ஷ்மன், பயிற்சி பட்டறை அணி கோவை மண்டல அமைப்பாளர் திரு. ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர்கள் திரு. மூர்த்தி, திரு. சந்தோஷ் குமார், திரு. கணேஷ் மற்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மத்திய அரசு தமிழகத்தில் இந்தி மொழியைத் திணிப்பதைக் கண்டித்தும், விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் விளை பொருட்கள் அனைத்திற்கும், மத்திய அரசானது இலாபகரமான-குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டியதை வலியுறுத்தியும், தங்கத்தைப் போல் உயர்ந்துவரும் உரத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்திட வேண்டியதின் அவசியத்தையும், கிராம சபைகளின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டுப் பேசிய பொதுச்செயலாளர் அவர்கள் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை திறம்பட எதிர்கொள்ளும்பொருட்டு விழுப்புரம் மண்டலத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை விரைந்து அமைத்திட வலியுறுத்தினார். – மக்கள் நீதி மய்யம்




https://twitter.com/Maiatamizhargal/status/1907472748391342204
நன்றி : மக்கள் நீதி மய்யம்