ஈரோடு : மார்ச் 11, 2௦23
ஈரோடு மேற்கு மாவட்ட நகரச் செயலாளர் திரு ஆட்டோ A.ரபிக் அவர்கள் நேற்று நள்ளிரவு சாலை விபத்தில் சிக்கி நம் மய்ய உறவுகள் அனைவரையும் விட்டு பிரிந்துள்ளார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அமரர் திரு. A.ரபிக் அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மவரின் நற்பணி இயக்கத்தில் பணியாற்றிய செயல்வீரரும் ஆவார்.
சிறப்பாக கட்சிப்பணிகளை துடிப்பாக செயலாற்றி வந்த நமது மய்யம் உறவான திரு ரபீக் அவர்களின் மறைவு அவருடைய குடும்பத்தாருக்கும் நமது மய்யத்திற்கு பேரிழப்பு ஆகும். மய்யத்தமிழர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.



