சென்னை மே 19, 2022
குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை மந்தைவெளி பகுதியில் கடந்த நான்கு நாட்களாக போராடி வருகிறார்கள். அவர்களுடைய போராட்டத்தில் பங்கு கொண்டு அவர்களுடன் துணை நின்று மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவினை தெரிவித்தது.
இதற்கு முந்தைய அதிமுக அரசின் ஆட்சிக்காலத்தில் நியமனம் நடந்தது எனில் இதுவரை தற்காலிக பணியில் எத்தனை ஆண்டுகளாக நிரந்தரம் செய்யாமல் காலம் கடத்தி வந்தது எதனால் என்று தற்போது ஆட்சிபொறுப்பில் இருக்கும் அரசின் சம்பந்தப்பட்ட துறையினர் கவனம் செலுத்தி இதற்கான தகுந்த தீர்வினை சட்டப்படி அவர்களுக்கு கிடைக்கச்செய்யும் வகையில் ஆவண செய்யும்படி மக்கள் நீதி மய்யம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது
சுற்றுப்புறச்சூழல் தூய்மையாக வைத்துக்கொள்ள தங்கள் பணிகளை தொய்வு கொள்ளாது நாள்தோறும் செய்துவரும் அவர்களின் வாழ்க்கைத்தரம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை எனபதே நிகழ்ந்து வருகிறது. அன்றாட வாழ்வை நகர்த்திச்செல்ல அவர்களுக்கு போதுமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் மேலும் நீண்ட நெடுங்காலமாக ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணிசெய்வதனால் அரசின் நிரந்தர ஊழியர்களின் சலுகைகளை பெறமுடியாமல் சொற்ப ஊதியங்களில் மிகுந்த சிரமங்களுடன் வாழ்க்கையை நகர்த்தும் அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி நடத்தும் போராட்டத்தில் மய்யம் துணைத்தலைவர் திரு மௌரியா மற்றும் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் அவர்கள் பங்கேற்று அவர்களிடையே உரையாற்றினர். இதில் மாவட்ட செயலாளர்கள் திரு ஓம்ப்ரகாஷ் திரு மாறன் திரு கோமகன் மற்றும் மாவட்டத் துணைசெயலாளர் திரு நிர்மல் உடனிருந்தனர் மற்றும் மய்ய உறவுகள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.




