மதுரை : மே 26, 2022
ஊராட்சி மன்ற செயலாளர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் என்னவென்று மேற்கொண்டு நடக்கும் போலீஸ் விசாரணையின்போது தெரியவரலாம்.
மதுரை மாவட்டம், இடையபட்டி ஊராட்சி மன்றச் செயலாளரும் கோயில் பூசாரியுமான லக்ஷ்மன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். காவல்துறையினர் இக்கொலைக்கான காரணத்தை அறிந்து கொள்ள விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் என்ன நடக்கப்போகிறதோ என மனதில் சூழும் கவலை மேகங்களுடன் மக்களும் தங்களது அன்றாட வாழ்வினை நகர்த்திக்கொண்டு வருவது நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதை மாறி தறி கெட்டுச் செல்கிறது என்றே நடக்கும் சம்பவங்கள் அப்பட்டமாய் காண்பிக்கிறது.
தமிழக முதல்வரின் கட்டுபாட்டில் இருக்கும் காவல் துறை தமது இரும்புக் கரங்களை எந்த தயவு தாட்சன்யங்களும் இல்லாமல் குற்றம் இழைப்பவர்களின் கைகளுக்கு விலங்கினை அணிவித்து விசாரித்து கடுமையான தண்டனைகளை உறுதி செய்வார்கள் எனில் மக்களும் நிம்மதி கொள்வார்கள்.


