மார்ச் : 21, 2025
அடுத்த ஆண்டு 2026 வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் முத்திரையை பதிக்க வேண்டிய காலகட்டம் இது. தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் கரங்களை வலுப்படுத்த இன்னும் கூடுதலான கரங்கள் இணைய வீறு நடை போட மாநில, மண்டல மற்றும் மாவட்ட செயலாளர்கள் என மேலும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு தலைவரின் கையொப்பமிட்ட நியமன கடிதம் உறுதிப்படுத்தியுள்ளது.
“அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முழுவீச்சுடன் எதிர்கொள்வதற்கான திட்டமிடல் மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகளை தொடங்கவேண்டிய வேளை இது! நம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நியமித்த கட்சியின் புதிய மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள்…” – மக்கள் நீதி மய்யம்



புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட நமது மய்ய உறவுகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறது மய்யத்தமிழர்கள்.com அனைத்து விதத்திலும் நேர்மையான அரசியலை விதைத்து அதனை திறம்பட முன்னெடுத்துச் செல்லும் நம் தலைவர் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம்.
நன்றி : மக்கள் நீதி மய்யம்