சென்னை ஜனவரி ௦9, 2௦23
தமிழக அரசின் 2௦23 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கோட்டையில் நடைபெறும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து ஆளுநர் தலைமையில் உரையுடன் துவங்கப்பட்ட போது மாண்புமிகு தமிழக ஆளுநர், மாண்புமிகு பேரவைத் தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர், துறை அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூடிய நிலையில் கூட்டத்தொடருக்கு முன்பாகவே ஆளுநர் உரையாற்ற வேண்டிய வரைவு அறிக்கையை ஆளுநரின் ஒப்புதல் பெற முன்பே அனுப்பிவைக்கப்பட்டு அதில் அவர் கையெழுத்திட்டு இருந்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த சில சொற்களை ஆளுநர் பேரவையில் படிக்க மறுத்த நிலையில் இதனை ஒப்புக்கொள்ளாத பேரவை உறுப்பினர்கள் தங்கள் ஆட்சேபத்தை தெரிவிக்கவே ஆளுநர் உடனடியாக வெளியேறினார். இதனை பல கட்சித் தலைவர்களும் கண்டித்துள்ளனர். அதனை ஆளுநரின் இந்த எதேச்சதிகாரப் போக்கினை கண்டித்து மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
சட்டமன்றத்தின் மாண்புகளை மீறி மக்களை அவமதிக்கும் ஆளுநர் – தலைவர் திரு கமல்ஹாசன் கண்டனம் ! அரசியல் சாசன மாண்புகளுக்கு எதிரான இப்போக்குகள் ஆளுநரால் மாற்றிக்கொள்ளப்படவில்லை எனில், ஆளுநரை மாற்ற வேண்டிய கோரிக்கையை முன்வைக்கும் நிலைக்கே நாங்கள் தள்ளப்படுவோம் ! என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது






தமிழக ஆளுநரின் அலட்சியப்போக்கினை கண்டித்து மக்கள் நீதி மய்யத் தலைவரின் கண்டன அறிக்கையை அச்சிட்டு சுவரொட்டியாக மக்களிடையே கொண்டு சென்ற ம.நீ.ம மதுரை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்.



