சென்னை : ம.நீ.ம தலைமை அலுவலகம் டிசம்பர் ௦4, 2022
இன்று (4.12.2022) கட்சி தலைமை அலுவலகத்தில் தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர்கள்திரு மௌரியா, திரு தங்கவேலு உள்ளிட்ட மாநில செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக அரசியல் நிலவரங்கள் ஆலோசிக்கப்பட்டது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றிய தலைவரின் அறிவுரைகளுடன் கூட்டம் முடிந்தது.

