சென்னை – செப்டெம்பர் 30, 2022
நம் இந்திய தேசத்தின் தந்தை என போற்றப்படுகிற மகாத்மா காந்தி என உலகம் முழுக்க அழைக்கப்படும் திரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின் 153 ஆவது பிறந்த நாள் விழா உலகமெங்கும் வாழ்ந்து வரும் இந்தியர்கள் அனைவரும் மிக உள்ளன்போடு பெரும் மதிப்போடும் சீரிய பண்போடும் கொண்டாடப்படும் நாளாக இருக்கும் இவ்வேளையில் காந்தியாரின் போதனைகளை என்றும் மறவாமல் அவரது வழியிலே நீதி நேர்மை துணிச்சல் ஈதல் என வெறும் வாய்மொழி வார்த்தைகளுடன் நீன்று விடாமல் சாத்தியம் என்பது சொல் அல்ல செயல் எனும்படியாக திகழ்ந்து வரும் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் ஆணைக்கு இணங்க மக்கள் நீதி மய்யம் சார்பில் “காந்தி ஜெயந்தி சிறப்பு பட்ட்மன்றம்” நடத்தவிருக்கிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி அன்று அதாவது அக்டோபர் 2ஆம் தேதி மாலை 5 மணி அளவில் நடை பெற உள்ளது. “திரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின் பூத உடலை சுட்டுக் கொல்ல முடியும். அவரின் அரசியல் தாக்கத்தை முற்றிலுமாக அழிக்க இயலுமா ? என்று தலைவர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட இத்தலைப்பில் நடக்கவிருக்கும் சிறப்பு பட்டிமன்றம் நிச்சயம் மிகச் சிறந்த நிகழ்வாக இருக்கும்.
தலைவரின் ஒப்புதலில் துனைதளைவரின் முன்னிலையில் நடக்கவிருக்கும் இந்நிகழ்விற்கு நமது மய்யம் உறவுகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
