அருணாசலப்பிரதேசம் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மரத்தின் ஒன்றின் மீது மோதியதில் விபத்திற்குள்ளானது இதில் இருந்த இரண்டு விமானிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விபத்து தொழில்நுட்ப கோளாறின் காரணமாக இருக்கலாமோ எனவும் சந்தேக்கிக்கபடுகிறது. இரண்டு விமானிகளின் பெயர் விவரம் யாதெனில் லெப்டினென்ட் கர்னல் திரு விவிபி ரெட்டி மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த் என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்தின் காரணமாக உயிரிழந்த இரண்டு ராணுவ அதிகாரிகள் குறித்து தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள்.
அருணாச்சலப் பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் தமிழக வீரர் மேஜர் ஜெயந்த் உள்ளிட்ட இரு ராணுவ அதிகாரிகள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. மேஜர் ஜெயந்த்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.