ஆவடி : மார்ச் ௦2, 2௦23
மிகத் துடிப்பான மாவட்டச் செயலாளர் ஆக விளங்கிய ஆவடியைச் சேர்ந்த திரு முஷ்டாக் அலி எனும் ஆவடி பாபு அவர்கள் இன்று மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளராக திறம்பட செயலாற்றி வந்த பாபு அவர்களின் அகால மரணத்திற்கு தனது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொண்டார் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள்.
மக்கள் நீதி மய்யத்தின் திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் முஸ்டாக் அலி (எ) ஆவடி பாபு உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் மக்கள் பணியில் மிகுந்த ஆர்வமுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட களப்பணியாளரை இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். – திரு கமல்ஹாசன்






