சோளிங்கநல்லூர், ஜூலை 30, 2022
நமது மக்கள் நீதி மய்யம், தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக சென்னை மேடவாக்கத்தில் மாநில செயலாளர் திரு. கிருபாகரன் (தகவல் & தொழில்நுட்பம்), மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் (தகவல், தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு), மாநில துணை செயலாளர் திரு SP சண்முகம் (விவசாய அணி, காஞ்சி மண்டலம்) மற்றும் காஞ்சி மண்டல அமைப்பாளர் திரு மௌலி (தகவல் & தொழில்நுட்பம்) ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் புதிதாக பொறுபேற்றுக் கொண்டவர்களின் அறிமுகப்படலமும் தகவல் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து இயங்கிட வேண்டிய ஆலோசனைகளையும் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர் திரு பிரவின் மார்கஸ் மற்றும் மாநில இணை செயலாளர் திரு தினேஷ் பாஸ்கர், துணை மாவட்ட அமைப்பாளர் திரு R. ராஜேஷ் (தகவல் & சமூக ஊடகப்பிரிவு, சோளிங்கநல்லூர்-திருப்போரூர்) அவர்களும் கலந்து கொண்டார். இந்நிகழ்வை ஏற்பாடு செய்த நடத்திய மாவட்ட அமைப்பாளர் திரு கே. சுதீர் (தகவல் & சமூக ஊடகப்பிரிவு, சோளிங்கநல்லூர்-திருப்போரூர்) அவர்கள் அனைவரையும் வரவேற்று நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்து பின்னர் நன்றியுரை நிகழ்த்தினார்.
மய்யத்தில் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட புதிய நிர்வாகிகள் ஆன துணை மாவட்ட அமைப்பாளர்கள் திரு பிரஷாந்த், செல்வி அக்ஷயா கண்ணன், நகர செயலாளர்கள் திரு முரளிதரன், திரு சாம் மற்றும் வட்டச் செயலாளர் திரு முத்துநாதன் ஆகியோர் தாங்கள் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி மாநில செயலாளர்களிடம் கேட்டுக் கொண்டனர் மேலும் புதிய நிர்வாகிகளுக்கு பிரத்யேகமாக கட்சியின் பெயர் பொறித்த டி ஷர்ட்கள் வழங்கப்பட்டன.











