திருச்சி ஜூலை 27, 2022
ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் மக்களைத் தேடி மனு நாள் முகாம் இன்று நடைபெற்றது. அவ்விடம் திருச்சி மேயர் திரு மு அன்பழகன் அவர்கள் வந்திருந்தார். மேயர் அவர்களிடம் திருவானைக்காவல் சூரிய நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திரு கிஷோர்குமார் அவர்கள் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. உடன் இருந்தவர்கள் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் திரு நாகவேல், மாவட்ட பொருளாளர் திரு கருப்பையா வழக்கறிஞர் திரு விஜய நாகராஜன், நற்பணி இயக்க முன்னாள் அமைப்பாளர் திரு குமார் ஒன்றிய செயலாளர்கள் திரு கணேஷ் திரு சுப்பராயன் திரு சசிகுமார் திரு லாயிஜ் ஜோசப் வட்ட செயலாளர் திரு ஆட்டோ பாஸ்கர் இளைஞரணி திரு கார்த்திகேயன் திரு மாதவன் மற்றும் மய்யம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.




