வேலூர் ஏப்ரல் 13, 2022
இதயங்கள் துடித்துக் கொண்டே இருப்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுரை தன் ரசிகர்களிடமும், தொண்டர்களிடமும் “மக்களுடன் மக்களாக மக்களுக்காக உங்களால் இயன்ற நற்பணிகளைச் செய்துகொண்டே இருங்கள் எனது உள்ளார்ந்த எண்ணமும் அது தான் அதைத் தவிர்த்து நீங்கள் எனக்காக கோடி கோடிகளாய் கொட்டிக் கொடுத்தாலும் எனக்கு அதில் ஒரு பைசாவும் தேவை இல்லை எனக்கு போதுமான அளவிற்கு தமிழக மக்கள் எனக்கு பேரதிகமான அன்பையும் வருமானத்தையும் அள்ளித் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது எஞ்சிய வாழ்வை வைத்து நேர்மையான ஓர் அரசியல் களத்தை முன்னெடுக்க வந்துள்ளேன் எனக்கு ஆதரவு தந்து வரும் அவர்களுக்கு நீங்கள் செய்யும் நற்பணிகள் நான் செய்வதாய் எண்ணிக் கொண்டு உங்களைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்” என்பார்.
அப்படி ஓர் உன்னத தலைவரின் தலைமையை கொண்ட மக்கள் நீதி மய்யம் உறவுகள் நிர்வாகிகள் எந்த பிரதிபலனும் பாராமல் மகத்துவமான நற்பணிகளை மக்களுக்காக செய்து வருகிறார்கள்.
வேலூர் மக்கள் நீதி மய்யம் மாவட்டத் துணைச் செயலாளர் திரு ரஞ்சித் குமார் அவர்களின் முன்னெடுப்பில் வேலூர் சிஎம்சி (CMC) மற்றும் மக்கள் நீதி மய்யம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் மய்ய நிர்வாகிகளுடன் கை கோர்த்து மிகச் சிறப்பாக எளிய மக்களும் பயனடையும் வகையில் நடத்தி வைக்கப்பட்டது.
கடிகார முட்கள் போல ஒன்றோடொன்று விடாமல் சுற்றிக்கொண்டு இருப்பது போல தங்களால் இயன்ற நற்பணிகளை செய்து வரும் மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கும் நற்பணி இயக்க உறவுகளுக்கும் தமது உளமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது மய்யதமிழர்கள்.


