மார்ச்’ 17, 2025

கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா பிரிவு ஓர் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ நிறுவனம்.

தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நல்லெண்ணம் மற்றும் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் செயலாற்றி வருகிறார்கள். மேலும் அமெரிக்க அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் இயக்கமாக அனைத்து சட்ட திட்டங்களுடன் இயைந்து மிகுந்த கட்டுக்கோப்புடன் இயக்கத்தினை திறம்பட நடத்தி வருகிறார்கள் அதன் நிர்வாகிகள். சமீபத்தில் அமெரிக்க அரசின் விருதும் கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு பள்ளிகளில் உள்ள கழிவறைகளை புதிப்பித்து தருவதும், புதிதாக கட்டித் தருவதும் என தொடர்ச்சியாக நற்பணிகளை முன்னெடுத்துச் செய்துவந்தவர்கள் மதுரையில் மலைச்சாமிபுரம் எனுமிடத்தில் நம்மவர் படிப்பகம் புதிதாக கட்டித் தரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை கல்லூரணியில் ஒரு நம்மவர் படிப்பகமும் கட்டப்பட்டு அப்பகுதி மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மேலும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஓர் நம்மவர் படிப்பகத்தை நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது தலைமையில் இயங்கும் கமல் பண்பாட்டு மையம் சார்பில் கட்டித் தந்துள்ளார். அதன்படி தற்போது மூன்று நம்மவர் படிப்பகங்கள் வெகு சிறப்பாக இயங்கி வருகிறது. அதன் மூலம் அங்கு படிக்க வரும் மாணவ மாணவியர்கள் அனைவரும் வெகு ஈடுபாட்டுடன் கற்று வருகிறார்கள்.

ஆகவே கமல்ஹாசன் நற்பணி இயக்கம் வட அமெரிக்க பிரிவு அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மூலம் செயல்படும் லீப் (Language Education and Proficiency) எனும் அமைப்பு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சியை அளித்து வருகிறது. அதன்படி நம்மவர் படிப்பகம் மற்றும் லீப் அமைப்பு இணைந்து ஏப்ரல் முதல் ஜூன் வரை 6 வரை ஆங்கிலப் பேச்சு பயிற்சி நடத்தப்பட உள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் பயிற்சியாக முன்னெடுத்து செல்லும் நம்மவர் படிப்பகம் மாணவ மாணவியர்கள் அனைவரும் பயனுற செய்திடும் வகையில் இயங்குவது வரவேற்கதக்கது.

நம்மவர் படிப்பகங்கள் மூலம் கோடை விடுமுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம்.

எதிர்காலத் தலைமுறையின் நலன்களை முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டை வளர்ப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். இதன் ஒரு பகுதியாக தற்போது நம்மவர் படிப்பகங்களில் கோடைகால இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னரே தனது ரசிகர் மன்றங்களை, நற்பணி இயக்கமாக மாற்றி, இரத்த தானம், உடல் தான முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என தொடர்ந்து மக்களுக்குப் பயனளிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

அதேபோல, மாணவர்கள், இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டுமென்ற உன்னத லட்சியத்துடன் நம்மவர் படிப்பகங்களைத் தொடங்கி வருகிறார். தற்போது மதுரை, அருப்புக்கோட்டை, பரமக்குடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்கள் மூலம் குழந்தைகள், மாணவ, மாணவிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் என ஏராளமானோர் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். கமல் பண்பாட்டு மையம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்களில் புத்தகங்களுடன், இலவச WIFI வசதியுடன் கூடிய கணினிகளும் நிறுவப்பட்டுள்ளதால், தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கு வருகை புரிகின்றனர்.

இந்தப் பணியை ஒருங்கிணைக்கும் வட அமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கம், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்புக்கான விஷயங்களை முன்னெடுத்து வருகிறது. அமெரிக்க அரசின் சிறந்த சமூகத் தொண்டுக்கான விருதுச் சான்றிதழ் தரத்தைப் பெற்றுள்ள இவ்வமைப்பு, மதுரை மாவட்டம் துவரிமான் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான பள்ளிக் கட்டிடத்தைப் புதுப்பித்துக் கொடுத்துள்ளது. அதேபோல, பல்வேறு மாவட்டங்களில் 15 பள்ளிகளில் 185 கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.

“திறன் மேம்பாடுதான் இந்தியாவின் அடுத்த சத்தியாகிரகம்” என்று திரு. கமல் ஹாசன் அவர்கள் கூறுவார். நாட்டின் கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம், அவர்களது பொருளாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தி, வறுமைக்கோட்டை அழித்து, செழுமைக்கோடாக மாற்ற முடியும். கிராமப்புற இளைஞர்களை தொழில்முனைவோராக உருவாக்கி, நகரங்கள் மற்றும் கிராமங்களிடையே இணைப்புப் பாலமாக மாற்றுவது அவசியமாகும். அதற்கு தரமான கல்வியும், வேலைவாய்ப்பை வழங்குவதும் முக்கியம்.

அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மூலம் செயல்படும் லீப் (Language Education and Proficiency) என்ற அமைப்பு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியை அளித்து வருகிறது. இந்நிறுவனத்துடன் இணைந்து நம்மவர் படிப்பகங்களில் கோடை விடுமுறையில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் ஏப்ரல் முதல் ஜூன் வரை 6 வாரங்களுக்கு நடத்தப்பட உள்ளது.

அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் அமெரிக்க மற்றும் இந்திய மாணவர்கள், ஆன்லைன் வாயிலாக நம்மவர் படிப்பகங்களில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்க உள்ளனர். ஆங்கிலத்தில் பேசுவதற்கு உள்ள தயக்கத்தைப் போக்கி, மாணவ, மாணவிகள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கு இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகளுக்கு, இப்பயிற்சி முகாம் செயல்வடிவம் கொடுப்பதாக அமையும். குறிப்பாக, கிராமப்புற மாணவர்களின் தகுதியை மேம்படுத்தி, அவர்களது திறனை வளர்த்துக் கொள்ள உதவும். மாணவர்கள், மகளிர் ஆகியோரது மேம்பாட்டுக்கானப் பணிகளில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து ஈடுபடும். சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கி, கல்வியும், திறன்மேம்பாடும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்வதே மக்கள் நீதி மய்யத்தின் பிரதான நோக்கமாகும். – மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/sunnewstamil/status/1901533335899566166
https://twitter.com/Maiatamizhargal/status/1901665777914356055
https://twitter.com/KHWelfareNA/status/1901868720143630435

MNM party to conduct free summer spoken English camp for students at Nammavar Study centres

https://twitter.com/lakshman1425/status/1901525513451299073

https://twitter.com/isatyagrahaa/status/1901870421152006573
https://twitter.com/ndtv/status/1901572214253871567

நன்றி : மக்கள் நீதி மய்யம் & சமூக ஊடகம்

#KamalHaasan #MakkalNeedhiMaiam #நம்மவர்_படிப்பகம்